வடக்கிலிருந்து அகற்றப்படும் இராணுவ முகாம்கள்?

Report Print Kamel Kamel in பாதுகாப்பு

வடக்கில் சுமார் 80 இராணுவ முகாம்கள் அகற்றப்படவுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அத்துடன், இராணுவத்தின் 33 படையணிகளை குறைப்பதன் மூலம் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் சுமார் 80 இராணுவ முகாம்கள் அகற்றப்பட உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த செய்தியில் மேலும், இராணுவத்தின் சுற்றுநிரூபம் ஒன்றின் அடிப்படையில் 33 படையணிகள் குறைக்கப்பட உள்ளன.

இதன்படி யாழ்ப்பாணத்தில் 7 படையணிகளும், வன்னியில் 9 படையணிகளும், கிழக்கில் 2 படையணிகளும், கிளிநொச்சியில் 5 படையணிகளும், முல்லைத்தீவில் 6 படையணிகளும், மேற்கில் ஒரு படையணியும் குறைக்கப்பட உள்ளன.

பொதுவாக ஓர் படையணி நான்கு இராணுவ முகாம்களை பராமரித்து வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

வடக்கில் பாதுகாப்பற்ற நிலை நீடித்து வரும் நிலையில் இவ்வாறு முகாம்கள் அகற்றப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த படையணிகளை அகற்றும் பணிகள் கடந்த ஜூன் மாதம் 10ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டன. இராணுவத் தளபதியின் சுற்று நிரூபத்தின் பிரகாரம் இவ்வாறு முகாம்கள் அகற்றப்படுகின்றன.

எனினும் படையினர் எண்ணிக்கை குறைப்பது தேசிய பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும் என பாதுகாப்பு ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுவதாக அந்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.