விடுதலை கிடையாது! பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர விடுத்துள்ள எச்சரிக்கை

Report Print Kamel Kamel in பாதுகாப்பு

குற்றம் இழைத்தால் பொலிஸார் என்றாலும் மன்னிப்பு கிடையாது என பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகமொன்று எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போது அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும் கூறுகையில்,

85,000 பேர் பொலிஸ் சேவையில் ஈடுபட்டு வருகின்றனர். சில குற்றச்செயல்களுடன் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தொடர்பு உண்டு என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இவ்வாறான பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சட்டத்தின் பிடியிலிருந்து விடுதலை கிடையாது.

பல்வெறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பில் விரிவான விசாரணைகள் நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை பொலிஸ் அதிகாரிகளே கண்டு பிடித்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பொலிஸ் சீருடை என்னும் போர்வைக்குள் இருந்து கொண்டு சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு அனுமதிக்கப்படாது என அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் பொலிஸ் மா அதிபர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.