யாழில் கைது செய்யப்பட்ட கிளிநொச்சி இளம் பெண்ணுக்கு ஏற்பட்ட நிலை! கூட்டு பாலியல் துஸ்பிரயோகமா?

Report Print Shalini in பாதுகாப்பு

யாழ். சாவகச்சேரி மீசாலைப் பகுதியில் உள்ள வீடொன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் தங்கியிருந்த குடும்பத்தலைவர் ஒருவரும் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி - பரந்தனைச் சேர்ந்த 22 வயதுடைய இளம் பெண் ஒருவரே இதில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தனது கணவருடன் பெண் ஒருவர் சட்டவிரோதமாக வாழ்ந்து வருவதாக, கைது செய்யப்பட்ட நபரின் மனைவி சாவகச்சேரி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

மனைவி வழங்கிய முறைப்பாட்டுக்கு அமையவே இவர்கள் இருவரும் சாவகச்சேரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண்ணிடம் மேற்கொண்ட விசாரணைகளில்,

குறித்த நபர் தன்னை காதலிப்பதாக ஏமாற்றி அந்த வீட்டுக்கு அழைத்துச் சென்றதாகவும், தன்னை தகாத முறையில் நடத்தியதாகவும், வேறு இரு நபர்களும் தன்னை தகாத முறையில் நடத்த முற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

குறித்த பெண் வழங்கிய தகவலுக்கு அமைய, அவர் கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளாரா என்ற கோணத்தில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள.

மேலும், மருத்துவ பரிசோதனைக்காக கைது செய்யப்பட்ட பெண் சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு பின் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் என யாழ். ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.