வடக்கிலிருந்து இராணுவ முகாம்கள் அகற்றப்படுமா? ஜனாதிபதி தெரிவித்துள்ள விடயம்

Report Print Kamel Kamel in பாதுகாப்பு

தேசியப் பாதுகாப்பு தொடர்பில் எவ்வித பிரச்சினைகளும் கிடையாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவையில் நேற்றைய தினம் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கூறுகையில்,

அரசாங்கம் வடக்கில் இராணுவ முகாம்களை அகற்றி வருவதாக சிலர் செய்து வரும் பிரச்சாரங்கள் அடிப்படையற்றவை.

அரசாங்கத்திற்கு எதிரான ஒரு சிலர் இது போன்ற போலிப் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது நாட்டில் தேசியப் பாதுகாப்பு தொடர்பில் எவ்வித பிரச்சினைகளும் கிடையாது என சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், தற்போதைய அரசாங்கத்திற்கு சர்வதேச சமூகத்தின் பலத்த ஆதரவு கிடைத்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.