ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு பாதுகாப்பு வழங்கிய டோலி உயிரிழந்தது

Report Print Steephen Steephen in பாதுகாப்பு

மட்டக்களப்பு விசேட பொலிஸ் பிரிவில் வெடி மருந்துகளை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வந்த டோலி என்ற மோப்ப நாய் உயிரிழந்துள்ளது.

நெதர்லாந்து நாட்டில் பிறந்த இந்த மோப்ப நாய் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் வெடி மருந்துகளை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வந்தது.

7 ஆண்டுகளாக வெடி மருந்துகளை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட டோலி, 200 முறை வெடி மருந்துகளை கண்டுபிடிக்க உதவியுள்ளது.

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் விஜயத்தின் போது டோலி பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உயிரிழந்த டோலியின் இறுதிக் கிரியைகள் மத அனுஷ்டானங்களின் பின்னர் நேற்று நடைபெற்றது.