யாழ். குடாநாட்டில் இத்தனை படை முகாம்களா? கடற்படையே ஆதிக்கம்

Report Print Murali Murali in பாதுகாப்பு

யாழ். குடாநாட்டில் 147 படைமுகாம்கள் செயற்பட்டு வருதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், 93 கடற்படை முகாம்களும், 54 இராணுவ முகாம்களும், விமானப்படை முகாம் ஒன்றும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த செய்தியில் தொடர்ந்தும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“யாழ். தீவகப் பகுதிகளில் 61 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன், குடாநாட்டின் கடற்கரை பகுதிகளில் 32 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குடாநாட்டில் 269 ஏக்கர் தனியார் காணிகளையும், 260 ஏக்கர் அரச காணிகளையும் படையினர் ஆக்கிரமித்துள்ளனர்.

இதேவேளை, குடாநாட்டில், 18 பொலிஸ் நிலையங்கள் உள்ளிட்ட 30 இடங்களில் பொலிஸார் தங்கியுள்ளனர். 18 இடங்களில் அமைந்துள்ள பொலிஸ் நிலையங்களில் 14 இடங்கள் தனியார் காணிகளை அபகரித்து அமைக்கப்பட்டுள்ளதாகவும்” தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Offers

loading...