முகமாலை பகுதியில் வெடிப்புச் சம்பவம்! ஒருவரின் நிலை..

Report Print Suman Suman in பாதுகாப்பு

கிளிநொச்சி - முகமாலை பகுதியில் இன்று காலை கண்ணிவெடியொன்று வெடித்துள்ளது.

இந்த வெடிப்புச் சம்பவத்தில் DASH நிறுவனத்தின் தொழிநுட்ப உதவியாளரான கருணாதிலக என்பவர் காயமடைந்து பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் கண்ணிவெடி ஒன்றினை செயலிழக்க செய்த போதே விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

இதேவேளை சம்பவம் தொடர்பான மேலதிக தகவல் எதனையும் இதுவரை பெற்றுக்கொள்ள முடியாதுள்ளதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.