மாறிக்கொண்டே இருக்கும் அச்சுறுத்தல்கள்! இராணுவ தளபதி

Report Print Ajith Ajith in பாதுகாப்பு

அச்சுறுத்தல்கள் எப்போதும் மாறிக்கொண்டே இருப்பதாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

இவற்றை எதிர்கொள்ள பல்வேறு திறன்கள் தேவைப்படுகின்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் அண்மையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் கூறுகையில், கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கை எதிர்வரும் 30, 31ஆம் திகதிகளில் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.