வவுனியாவில் தனிமையில் வசிக்கும் பெண்ணுக்கு ஏற்பட்டுள்ள நிலை

Report Print Gokulan Gokulan in பாதுகாப்பு

வவுனியா - குருமன்காடு பகுதியில் வசித்துவரும் பெண் தலைமைத்துவக் குடும்பத்திற்கு நபர் ஒருவரால் தொடர்ந்தும் துன்புறுத்தல்கள் ஏற்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறி்த்த பகுதியில் இரண்டு பிள்ளைகளுடன் வாழ்ந்து வரும் கணவரற்ற பெண் தலைமைத்துவக் குடும்பம் ஒன்றிற்கு திருமணமாகிய நபர் ஒருவர் இரவு வேளைகளில் வீட்டிற்குள் நுழைந்து மதுபோதையில் அச்சுறுத்தி வருவதாக குறிப்பிடப்படுகின்றது.

குறித்த நபரின் துன்புறுத்தல் காரணமாக அப்பகுதியில் தனிமையில் வசிக்க முடியாத நிலை தனக்கும் தனது பிள்ளைகளுக்கும் ஏற்பட்டுள்ளதாக தனக்கு விடுக்கப்பட்ட துன்புறுத்தல் மற்றும் அச்சுறுத்தலுக்கு நடவடிக்கை எடுத்து பாதுகாப்பான சூழ்நிலையை ஏற்படுத்தித் தருமாறு பாதிக்கப்பட்ட பெண்ணால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.