கொழும்பில் 95 கடவுச்சீட்டுகளுடன் சிக்கிய முதியவர்

Report Print Kamel Kamel in பாதுகாப்பு

கொழும்பில் 72 வயதான முதியவர் ஒருவரிடமிருந்து 95 கடவுச்சீட்டுக்கள் மீட்கப்பட்டுள்ளன.

சட்டவிரோதமான முறையில் 95 கடவுச்சீட்டுக்களை வைத்திருந்தார் என முதியவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

திட்டமிட்ட குற்றச் செயல்களை தடுக்கும் பொலிஸ் பிரிவினர் அண்மையில் குறித்த நபரை, கொழும்பு மாருதானை பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர்.

சந்தேக நபரிடமிருந்து 95 கடவுச்சீட்டுக்கள், 5 போலி வீசாக்கள், தொடர்பாடல் சாதனங்கள் உள்ளிட்டன மீட்கப்பட்டுள்ளன.

சந்தேக நபரை எதிர்வரும் 21ம் திகதி வரையில் சந்தேக நபரை விளக்க மறியலில் வைக்குமாறு கடுவெல பதில் நீதவான் ஹேமபால ஏக்கநாயக்க உத்தரவிட்டுள்ளார்.

72 வயதான காமினி ஜயதிஸ்ஸ என்னும் நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

மடிக்கணனி, ஸ்கேனர், குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தின் போலி இறப்பர் முத்திரைகள் உள்ளிட்டன மீட்கப்பட்டுள்ளன.

இந்தியா, இத்தாலி உள்ளிட்ட மேற்குலக நாடுகள் பலவற்றுக்கு போலி வீசாக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

இந்த சந்தேக நபருக்கு 72 வயது எனவும் இவரினால் நவீன தொடர்பாடல் சாதனங்களை பயன்படுத்தக் கூடிய ஆற்றல் கிடையாது என அவரின் சார்பில் சட்டத்தரணி நீதிமன்றில் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இந்த வாதத்தை ஏற்றுக்கொள்ள மறுத்த நீதிமன்றம் குறித்த நபருக்கு பிணை வழங்க முடியாது எனவும், 21ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைப்பதாகவும் அறிவித்துள்ளது.