இரவோடிரவாக வீடுகளில் இருந்து வெளியேறிய பல குடும்பங்கள்

Report Print Thirumal Thirumal in பாதுகாப்பு
388Shares

ஹட்டன், ஸ்ரதன் தோட்டத்தில் மண்சரிவு அபாயம் காரணமாக 23 குடும்பங்களை சேர்ந்த 61 பேர் வீடுகளில் இருந்து நேற்று இரவு வெளியேறியுள்ளனர்.

இவர்கள் பாதுகாப்பாக ஹட்டன், புரூட்ஹில் தமிழ் மகா வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மலையகத்தில் தொடர்சியாக சீரற்ற காலநிலை நிலவி வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பல பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டிருந்தது.

அத்துடன் இன்னும் சில பகுதிகளிலுள்ள மக்களுக்கு மண்சரிவு ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஹட்டன், ஸ்ரதன் தோட்டத்திலுள்ள குடியிருப்புகளுக்கு மேல் உள்ள மலைப்பகுதியில் பாரிய வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ள நிலையில் அங்கு மண்சரிவு அபாயம் காணப்படுவதாக தெரிவித்து மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இதேவேளை புரூட்ஹில் தமிழ் மகா வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு தேவையான சமைத்த உணவுகளை வழங்கவும், அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொடுக்கவும் அம்பகமுவ செயலாளரின் பணிப்புரையின் கீழ் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கிராம சேவகர் தெரிவித்துள்ளர்.