கடற்படையினரும், விமானப்படையினரும் மேற்கொண்ட தேடுதலுக்கு கிடைத்த பலன்

Report Print Ajith Ajith in பாதுகாப்பு

அம்பலாங்கொடை மீனவர் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற நிலையில், காணாமல்போன 11 மீனவர்களும் மீட்கப்பட்டுள்ளனர்.

நேற்றைய தினம் அவர்கள் கடலுக்குச் சென்றிருந்தனர்.

இந்த நிலையில், சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட அலையின் தாக்கத்தினால் அவர்கள் பயணித்த படகு காணாமல்போயுள்ளது.

இதையடுத்து, கடற்படையினரும், விமானப் படையினரும் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் குறித்த 11 மீனவர்களும் மீட்கப்பட்டுள்ளனர்.