பம்பலப்பிட்டியில் கட்டடம் ஒன்றில் தீ விபத்து

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

பம்பலப்பிட்டி பகுதியில் உள்ள கட்டடம் ஒன்றில் இன்று அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பம்பலப்பிட்டி சந்தியில் உள்ள கட்டடத்திலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாதனி விற்பனை கடைகளை கொண்ட கட்டடத்தில் தீ பற்றியுள்ளது. எனினும் தீப்பற்றியமைக்கான காரணம் மற்றும் சேத விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.

தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு தீயணைப்பு பிரிவினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.