இலங்கை மக்களுக்கு விசேட எச்சரிக்கை!

Report Print Vethu Vethu in பாதுகாப்பு
1042Shares

இலங்கையில் கைதொலைபேசி பாவனையாளர்களுக்கு விசேட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொலைபேசியில் வரும் வித்தியாசமான அழைப்புகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சமகாலத்தில் உலகம் முழுவதும் வாழும் மக்களுக்கு புதிய தொழில்நுட்பத்திலான கையடக்க தொலைபேசியை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தமக்கு அறிந்த இலக்கத்தில் இருந்து வரும் தொலைபேசி அழைப்புகளுக்கு நாம் நிச்சியம் பதிலளிப்போம். எனினும் தற்போது புதிய ஏமாற்று நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இணைய வசதி ஊடாக நமது தொலைபேசி இலக்கத்தில் இருந்து வேறு ஒரு நபருக்கு அழைப்பேற்படுத்தும் தொழில்நுட்பம் ஒன்று தற்போது உருவாகியுள்ளது. அந்த தொழில்நுட்பத்தின் ஊடாக நமது குரல் மற்றும் பின்னணி குரல்களை மாற்றுவதற்கான வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய நமது இலக்கத்தை பயன்படுத்திய நம்மை போன்று வேறு நபர் பேசுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

இந்த மோசடியில் இலங்கை சமூக செயற்பாட்டாளர் ஒருவர் சிக்கியுள்ளார். அவரது இலக்கத்தில் இருந்து பொலிஸ் உயர் அதிகாரிக்கு அழைப்பேற்படுத்தி மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

எனினும் அவ்வாறான எந்தவொரு அழைப்பையும் அவர் மேற்கொள்ளவில்லை. கையடக்க தொலைபேசி நிறுவனத்திடம் பெற்றுக் கொள்ளப்பட்ட அறிக்கையிலும் பொலிஸ் அதிகாரிக்கு அழைப்பேற்படுத்தியமைக்கான பதிவுகளையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த சம்பவம் தொடர்பில் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திடம் அவர் முறைப்பாடு செய்துள்ளார்.

இலங்கை மக்களுக்கு வரும் அழைப்பில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் உடனடியாக பொலிஸார் அல்லது தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திடம் முறைப்பாடு செய்யுமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.