விமானப்படை லொறியுடன் மோதிய வான்! சம்பவ இடத்திலேயே இருவர் பலி

Report Print Shalini in பாதுகாப்பு

வெல்லவாய - தனமல்வில, குடாஓயா பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வான் ஒன்றும், இலங்கை விமானப்படைக்கு சொந்தமான லொறி ஒன்றும் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் வானில் பயணித்த நான்கு பேரில் மூவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், வான் சாரதியான தம்புள்ளை பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய நபரும், புத்தளம் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய பெண்ணுமே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை குடாஓயா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Latest Offers