இலங்கை வரலாற்றில் முதன்முறையாக செய்யப்படவுள்ள அதிரடி மாற்றங்கள்

Report Print Kamel Kamel in பாதுகாப்பு

பொலிஸ் திணைக்களத்தில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக பொலிஸ் பிரிவுகளை, பெண் பொலிஸ் அத்தியட்சகர்களிடம் ஒப்படைப்பதற்கான திட்டங்கள் பொலிஸ் தலைமையகத்தால் வகுக்கப்பட்டுள்ளன.

மேலும், பெண் பொலிஸ் அதிகாரிகளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளாக நியமிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

492 பொலிஸ் நிலையங்களுக்கான பொறுப்பதிகாரிகளை நியமிக்கும் போது இனி வரும் காலங்களில் பெண் அதிகாரிகளையும் நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

இந்த ஆண்டு இறுதியில் பெண் அதிகாரிகள் பொலிஸ் நிலையப் பொறுப்பாதிகாரிகளாக நியமிக்கப்பட உள்ளனர்.

இதற்கான அதிகாரிகளை தெரிவு செய்யும் நடவடிக்கைகள் தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர அண்மையில் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

பல்வேறு பிரிவுகளின் பொறுப்பதிகாரிகளாக செயற்பட்டு வரும் பெண் பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு பொலிஸ் பிரிவுகள் ஒப்படைக்கப்பட்டது கிடையாது.

எனினும் பொலிஸ் மா அதிபரின் எண்ணக்கருவிற்கு அமைய எதிர்வரும் காலங்களில் பெண் பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு பொலிஸ் பிரிவுகள் ஒப்படைக்கப்பட உள்ளன.

Latest Offers