முல்லைத்தீவில் பேருந்திலிருந்து இறங்க முற்பட்ட இளைஞனுக்கு நேர்ந்த பரிதாப நிலை

Report Print Mohan Mohan in பாதுகாப்பு

முல்லைத்தீவில் பேருந்திலிருந்து இறங்க முற்பட்ட இளைஞரொருவர் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் புளியங்குளம் - பரசங்குளம் சந்திக்கு அருகில் நேற்று மாலை நடைபெற்றுள்ளது.

இதில், மாங்குளம் பகுதியை சேர்ந்த 30 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான கோ.திருவள்ளுவர் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.

இவர் தனது மனைவியையும் குழந்தையையும் பொலன்னறுவையில் விட்டு விட்டு மாங்குளத்திற்கு திரும்பும் போது, பரசங்குளம் பகுதியில் உள்ள தனது சகோதரனின் வீட்டிற்குச் செல்வதற்காக பேருந்தில் இருந்து இறங்க முற்பட்டுள்ளார்.

இதன்போது, அவரிடமிருந்த பயணப்பொதி பேருந்தில் அகப்பட்டதால் இவர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்துள்ளார்.

இவரை உடனடியாக வவுனியா வைத்தியாசாலைக்கு கொண்டு சென்ற போதும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

தலைப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டதால் அவர் உயிரிழந்துள்ளார் என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும், குறித்த பேருந்தின் சாரதி கனகராயன் குளம் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை புளியங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Offers