கைது செய்யப்படுவாரா அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தன?

Report Print Kamel Kamel in பாதுகாப்பு

கூட்டுப்படைகளின் பிரதானியும் முன்னாள் கடற்படை தளபதியுமான அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தன இன்றைய தினம் கைது செய்யப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.

சிங்கள ஊடகமொன்று இன்று வெளியிட்டுள்ள செய்தியிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த செய்தியில் மேலும்,

11 இளைஞர்களை கடத்தி காணாமல்போக செய்தமை, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை போன்ற சம்பவங்களுடன் தொடர்புடைய நேவி சம்பத் எனப்படும் சந்தேகநபருக்கு அடைக்கலம் வழங்கியமை, நாட்டை விட்டு வெளியேறுவதற்கு உதவியமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் ரவீந்திர விஜேகுணவர்தன மீது சுமத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இன்று முன்னிலையாகுமாறு ரவீந்திர விஜேகுணவர்தனவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் குற்றப் புலனாய்வுப் பிரிவில் அவர் முன்னிலையாக தவறினால், அவரது இருப்பிடத்திற்கு சென்று அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என புலனாய்வு பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குற்றச் செயலுடன் தொடர்புடைய நபருக்கு அடைக்கலம் வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள ரவீந்திர விஜேகுணவர்தனவை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரட்ன இதற்கு முன்னதாக உத்தரவிட்டிருந்தார்.

நேவி சம்பத் என்ற சந்தேகநபரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அண்மையில் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers