விஷேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த இரகசிய தகவல்! வவுனியாவில் இளைஞர் கைது

Report Print Theesan in பாதுகாப்பு

வவுனியா - குருக்கள்புதுக்குளம், பூவரசங்குளம் பகுதியில் இன்றைய தினம் கட்டுத்துப்பாக்கியுடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் இன்று அதிகாலை சட்டவிரோத கட்டுத்துப்பாக்கியுடன் காட்டு பகுதிக்கு வேட்டையாட சென்றிருப்பதாக விஷேட அதிரடிப் படையினருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதனடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போதே சாந்தகுமார் லூகஸ் (வயது 25) என்பவரை கட்டுதுப்பாக்கியுடன் கைது செய்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பூவரசங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், சந்தேகநபர் விசாரணைகளின் பின் இன்று நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளார்.