யாழில் சிவன் ஆலயத்திற்கு முன்பாக நிலத்தை தோண்டிய போது கிடைத்த பொருள்

Report Print Suthanthiran Suthanthiran in பாதுகாப்பு

யாழ். பல்கலைக்கழக வளாகத்திற்குள் பழுதடைந்த நிலையில் காணப்பட்ட கைக்குண்டு தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கைக்குண்டு இன்று காலை அவதானிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள சிவன் ஆலயத்திற்கு முன்பாக நிலத்தை தோண்டும் பணியொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போதே நிலத்தை தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் பழுதடைந்த நிலையில் காணப்பட்ட கைக்குண்டு ஒன்றை அவதானித்துள்ளனர்.

இதனையடுத்து குறித்த விடயம் தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தப்பட்ட நிலையில் பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

Latest Offers