கிளிநொச்சியில் படையினருக்கான தற்காப்புக்கலை பயிற்சி வகுப்புகள்

Report Print Yathu in பாதுகாப்பு

கிளிநொச்சியில் தமிழரின் பாரம்பரிய விளையாட்டு மற்றும் தற்காப்பு “அன்கம்பொர” கலையினை படையினருக்கு வழங்கும் பயிற்சி வகுப்பிற்கான ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி, இரணைமடு சந்தியில் அமைந்துள்ள நெலும்பியசவில் இன்று காலை குறித்த நிகழ்வு ஆரம்பமாகியுள்ளது.

இதில் 3 மாத பயிற்சியினை கிளிநொச்சி இராணுவ தலைமையகத்தின் கீழ் உள்ள 100 பேர் மேற்கொள்ளவுள்ளதுடன் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட உள்ளன.

இந்த நிகழ்வில் கிளிநொச்சி படைகளின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் நிசங்க ரணவன உள்ளிட்ட இராணுவ உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.

இதன்போது தற்காப்பு கலை தொடர்பான காட்சிப்படுத்தலும் நடைபெற்றுள்ளது.

தற்காலங்களில் சிலம்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய கலைகள் அழிவடைந்து வரும் நிலையில் இவ்வாறான கலைகளை பயிற்சிகள் மூலம் ஊக்குவித்து எமது பாரம்பரியங்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அனைவரினதும் பொறுப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...