வவுனியாவில் இ.போ.ச சாரதியை தாக்க முயற்சி

Report Print Theesan in பாதுகாப்பு

வவுனியா - பூந்தோட்டம் பகுதியில் வைத்து இ.போ.ச சாரதி மீது தாக்குதல் நடத்த, அடையாளம் தெரியாத நபர்கள் முயற்சித்துள்ளதாக தெரியவருகிறது.

இந்த சம்பவம் இன்று அதிகாலை 5.00 மணியளிவில் இடம்பெற்றுள்ளதுடன், மோட்டார்சைக்கிளில் வந்தவர்களே தாக்க முயற்சித்துள்ளதாக தெரியவருகிறது.

மதீனா நகரிலிருந்து வவுனியா இ.போ.ச சாலைக்கு கடமைக்காக மோட்டார்சைக்கிளில் ஏ.ஆர்.பசிர் (வயது 34) சென்று கொண்டிருந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது அந்த நபர்கள் தனியார் பேருந்துக்கு எதிராகவா ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கின்றாய் என அச்சுறுத்தல் விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எனினும் குறித்த சாரதி அவர்களிடமிருந்து தப்பித்து வவுனியா பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பான முறைப்பாடுகள் வவுனியா பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.