திருகோணமலையில் காதல் ஜோடியை இலக்கு வைத்து துப்பாக்கிச்சூடு!

Report Print Abdulsalam Yaseem in பாதுகாப்பு

திருகோணமலை - மூதூர் பகுதியில் பேருந்தில் பயணித்த காதல் ஜோடியை இலக்கு வைத்து துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மூதூர் - புளியடி பகுதியில் சற்றுமுன்னர் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

மூதூரில் இருந்து திருகோணமலை நோக்கி சென்ற தனியார் பேருந்தில் குறித்த ஆணும் பெண்ணும் பின் ஆசனத்தில் அமர்ந்து சென்றுள்ளனர்.

இதன்போது அடையாளம் தெரியாத நபர்கள் அவர்களை இலக்கு வைத்து வெளியில் இருந்து துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

இதில் பேருந்தின் கண்ணாடி மட்டும் உடைந்துள்ளதாகவும், பெண்ணுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

மேலும், பாதிக்கப்பட்ட ஜோடி காலிக்கோயில் சந்தியில் இறங்கியதாகவும், இந்த துப்பாக்கிச்சூடு தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளதாகவும் செய்தியாளர் குறிப்பிட்டார்.