யாழில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சிறுவன்! கொலை என சந்தேகம்

Report Print Sumi in பாதுகாப்பு

யாழ்ப்பாணம் - இளவாலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சில்லாலை கதிரைமாதா ஆலயத்திற்கு அருகில் சிறுவன் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுவன் தனது வீட்டுக்கு முன்னால் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்துள்ளார்.

இந்த மரணம் கொலையாக இருக்கலாம் என இளவாலை பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இதில் 12 வயதுடைய நிலோஜன் என்ற சிறுவனே உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

சில்லாலை கதிரைமாதா ஆலயத்திற்கு செல்ல ஆயத்தமான நிலையில் குறித்த சிறுவன் வீட்டு முற்றத்தில் உயிரிழந்து கிடந்ததை பெற்றோர் அவதானித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை இளவாலை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Latest Offers