பாகிஸ்தான் பாதுகாப்புச் செயலாளர் இலங்கை விஜயம்

Report Print Kamel Kamel in பாதுகாப்பு

பாகிஸ்தானின் பாதுகாப்புச் செயலாளர் லெப்டினன் ஜெனரல் இக்ராம் உல் ஹக் உயர்மட்ட பிரதிநிதிகள் குழுவொன்றுடன் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.

நான்கு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு பாகிஸ்தான் பாதுகாப்புச் செயலாளர் நாளை இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.

இலங்கை – பாகிஸ்தான் பாதுகாப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக பாதுகாப்புச் செயலாளர் தலைமையிலான பிரதிநிதிகள் குழு இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளது.

இலங்கை பாதுகாப்புச் செயலாளர் கபில வித்தியாரட்ன, கூட்டுப் படைகளின் பிரதானி அட்மிரால் ரவீந்திர விஜேகுணரட்ன ஆகியோரை இந்தப் பிரதிநிதிகள் சந்திக்க உள்ளனர்.

இரு தரப்பு பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்திக்கொள்ளல் மற்றும் பிராந்திய வலயத்தின் பாதுகாப்பு நிலைமைகள் பற்றி கவனம் செலுத்துதல் ஆகிய நோக்கங்களின் அடிப்படையில் இந்த விஜயம் அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Latest Offers