அரசாங்கம் வழங்கியுள்ள அறிவுறுத்தல்

Report Print Kamel Kamel in பாதுகாப்பு

சுய விருப்பின் அடிப்படையில் ஓய்வு பெற்று கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

பொலிஸ் மா அதிபருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட முன்னதாக, சுய விருப்பின் அடிப்படையில் ஓய்வு பெற்றுக் கொள்ளுமாறு அரசாங்கம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

அரசாங்கத்தின் சிரேஸ்ட பேச்சாளர் ஒருவர் இந்த தகவலை கொழும்பு ஊடகங்களுக்கு வழங்கியுள்ளார்.

அரசாங்கத்தின் சிரேஸ்ட அதிகாரியொருவர் பொலிஸ் மா அதிபரிடம் ஓய்வு பெற்றுக் கொள்ளும் யோசனையை முன்வைத்துள்ளார்.

எனினும், ஓய்வு பெற்றுக் கொள்வது தொடர்பில் பொலிஸ் மா அதிபர் இதுவரையில் எவ்வித பதிலையும் அளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

Latest Offers

loading...