யாழ். கொக்குவில் பகுதியில் அதிரடியாக களமிறக்கப்பட்ட விசேட பொலிஸ் அணி

Report Print Sumi in பாதுகாப்பு

யாழ்ப்பாணம் - கொக்குவில் பகுதியில் வன்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மறைந்திருப்பதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் விசேட தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய பொலிஸ் நிலையங்களில் இருந்து அதிரடியாக களமிறக்கப்பட்ட விசேட பொலிஸ் அணியினரால் இன்று அதிகாலை முதல் கொக்குவில் பகுதியில் சுற்றிவளைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

யாழ்ப்பாணக்குடா நாட்டில் சட்டம் ஒழுங்கை குழப்புவோரை கைது செய்யும் நோக்கோடு இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் வர்ணசூரியவின் தலைமையில் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன், பொதுமக்களின் அன்றாட செயற்பாடுகளுக்கு பாதிப்பில்லாத வகையில் இனங்காணப்பட்ட வீடுகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டதோடு, சந்தேகமான முறையில் நடமாடுபவர்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் பயணித்த இளைஞர்களிடம் வாகன அனுமதி அட்டைகள் மற்றும் அவர்கள் கொண்டு செல்லும் பொருட்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த விசேட சுற்றிவளைப்பின்போது சந்தேகநபர்கள் யாராவது கைது செய்யப்பட்டமை தொடர்பிலோ சந்தேகத்திற்கிடமான பொருட்கள் மீட்கப்பட்டமை தொடர்பிலோ எவ்விதமான தகவல்களும் கிடைக்கப்பெறவில்லை என எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

Latest Offers