மன்னாரில் இராணுவ அணிவகுப்பு நிகழ்வு

Report Print Ashik in பாதுகாப்பு

இலங்கை இராணுவத்தின் 69வது ஆண்டு நிறைவையொட்டி மன்னார் தள்ளாடி 54வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் அணிவகுப்பு நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

குறித்த அணிவகுப்பு மரியாதை நிகழ்வு, மன்னார் சௌத்பார் பிரதான வீதியில் இன்று காலை 8.30 மணியளவில் ஆரம்பமாகியுள்ளதுடன், தொடர்ந்து மன்னார் பிரதான பாலத்தினுடாக தள்ளாடி 54வது படைப்பிரிவை சென்றடைந்துள்ளது.

தள்ளாடி 54வது படைப்பிரிவு அதிகாரி பிரிக்கேடியர் செனரத் பண்டார தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் 70 அதிகாரிகளும், 800 இராணுவ வீரர்களும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இதேவேளை இலங்கை இராணுவத்தின் 69வது ஆண்டு நிறைவையொட்டி மன்னார் தள்ளாடி 54வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் கடந்த திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய இரு தினங்களிலும் மன்னார் நகரில் இராணுவத்தினரால் மாபெரும் டெங்கு ஒழிப்பு சிரமதானப்பணிகள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.