தென்னிலங்கையை உலுக்கிய பயங்கரம் - 80 பேர் படுகாயம் - ஐவர் ஆபத்தான நிலையில்

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

தென்னிலங்கையில் இன்று காலையில் ஏற்பட்ட பாரிய விபத்து காரணமாக 80 பேர் வரையில் காயமடைந்துள்ளதுடன் ஐந்து பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்தில் காயமடைந்தவர்களில் அதிகமானோரின் முகம், தலை மற்றும் முதுகு பாதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்ட, லுனுகம்வேஹேர பகுதியில் விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரண்டு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதியமையினால் விபத்து ஏற்பட்டுள்ளது.

காயமடைந்தவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

தனியார் மற்றும் அரச பேருந்தும் ஒன்றுக்கு ஒன்று மோதியமையால் விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Latest Offers