நீர்கொழும்பில் பிரபல பெண்கள் பாடசாலையில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்திய சம்பவம்

Report Print Kamel Kamel in பாதுகாப்பு

நீர்கொழும்பில் அமைந்துள்ள பிரபல பெண்கள் பாடசாலையொன்றின் வளாகத்தில் நேரக் குண்டு (Time bomb) உள்ளதாக பாடசாலை அதிபருக்கு தொலைபேசி மூலம் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

இதனால் பாடசாலையில் பெரும் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.

மேலும், குண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும் 20 நிமிடத்திற்குள் மாணவிகள் அனைவரையும் வெளியேற்றிக் கொள்ளுமாறும் தொலைபேசி அழைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து பாடசாலை அதிபர், மாணவிகளை பாதுகாப்பாக மைதானமொன்றிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

இதன்போது குண்டுகள் எவையும் மீட்கப்படவில்லை எனவும், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Latest Offers