கொழும்பில் நடக்கும் சதி முயற்சி! கடுமையான மனவருத்தத்தில் ஜனாதிபதி

Report Print Vethu Vethu in பாதுகாப்பு
849Shares

சமகால பாதுகாப்பு நெருக்கடி காரணமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடும் மனவேதனையில் உள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

நாட்டின் அரச தலைவரான தன்னை கொலை செய்வதற்காக சூழச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. எனினும் அரசாங்கத்தின் பிரபலங்கள், விசேடமாக பிரதமர் மற்றும் சட்டம் ஒழுங்கு அமைச்சர் இது தொடர்பில் அமைதியை கடைபிடித்து வருகின்றனர்.

இதனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடும் வருத்தத்தில் உள்ளதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி, ராஜபக்சர்களுடன் கலந்ரையாடல் மேற்கொள்ள நேரிட்டமையும் இதுவே காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ராஜபக்சர்களையும் கொலை செய்ய ஆயத்தங்கள் மேற்கொள்வதாக தகவல் வெளியாகியமை மற்றும் அரசாங்கத்தின் அதிகாரிகள் இது தொடர்பில் உரிய பதில் ஒன்றை வழங்காமையினாலும் ஜனாதிபதி, ராஜபக்சர்களுடன் கலந்துரையாடியதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் சந்தேக நபர்களை காப்பாற்றுவதற்கு அரசாங்கத்தின் பிரபலங்கள் மேற்கொள்ளும் முயற்சி தொடர்பில் அண்மையில் அமைச்சர்கள் சிலரிடம் ஜனாதிபதி மிகுந்த வருத்தத்துடன் கருத்து வெளியிட்டுள்ளதாக குறித்த ஊடகம் மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.