யாழில் வாள்வெட்டு வன்முறைகளில் ஈடுபடுவோரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை

Report Print Sumi in பாதுகாப்பு
129Shares

யாழ்ப்பாணத்தில் 4 பொலிஸ் பிரிவுகளில் நேற்று முன்னெடுக்கப்பட்ட பொலிஸ் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 41 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம், மானிப்பாய், சுன்னாகம் மற்றும் கோப்பாய் பொலிஸ் பிரிவுகளில் நேற்று மாலை தொடக்கம் சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் கண்காணிப்பாளர் தலைமையில் வாள்வெட்டு வன்முறைகளில் ஈடுபடுவோர் மற்றும் நீதிமன்றங்களால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தேடப்படுபவர்களை இலக்காக வைத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த 9ஆம் திகதி யாழ்ப்பாணம், மானிப்பாய் மற்றும் சுன்னாகம் பொலிஸ் பிரிவுகளில் பொலிஸ் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் நேற்று கோப்பாய் பொலிஸ் பிரிவிலும் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.