யாழில் கல்வியற் கல்லூரியில் 25 மாணவர்களுக்கு ஏற்பட்ட நிலை

Report Print Shalini in பாதுகாப்பு

யாழ்ப்பாணம் - கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியைச் சேர்ந்த 25 மாணவர்கள் அவர்களது வீடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வைரஸ் காய்ச்சல் காரணமாகவே இவர்கள் வீடுகளுக்கு அனுப்பப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

யாழ். சுகாதார பிரிவினர் நேற்று கல்லூரியில் மேற்கொண்ட பரிசோதனையின் போது குறித்த மாணவர்களுக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

பின்னர், குறித்த மாணவர்களை உடனடியாக கல்லூரியில் இருந்து வெளியேற்றுமாறு சுகாதார பிரிவினர் கல்லூரி நிர்வாகத்திற்கு அறிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து, வைரஸ் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த 25 மாணவர்களும் அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Latest Offers

loading...