கொழும்பு மக்கள் மற்றும் சாரதிகளுக்கு விசேட எச்சரிக்கை

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

நீர்த்தேக்கங்கள் பலவற்றின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளமையினால் தாழ் நிலங்களில் வாழும் மக்கள் மிகுந்த அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.

ராஜாங்கனை, தெதுரு ஓய, குக்குள் கங்கை, அங்கமுவ, பராக்கிரம சமுத்திரம், விக்டோரியா மற்றும் தப்போவ ஆகிய நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

இதனால் அந்த பிரதேசங்களில் வாழும் மக்கள் அதிக அவதானமாக இருக்க வேண்டும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதி இயக்குனர் பிரதிப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொழும்பு - கண்டி வீதியின் கீழ் கடுகன்னாவ பிரதேசத்தில் ஆபத்தான மரங்களை நீக்குவதற்கு இன்று காலை முதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதனால் வீதியில் பயணிக்கும் வாகனங்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்தப்படும் என பிரதிப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

இதனால் சாரதிகள் பயணிக்கும் வீதிகள் தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் என திரு.கொடிப்பிலி சுட்டிக்காட்டியுள்ளார்.