பதற்றமான சூழ்நிலையில் தீவிர பாதுகாப்பில் இலங்கை! பொலிஸாரின் விடுமுறை இரத்து

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் பதற்ற நிலையை கருத்திற் கொண்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

அதற்கமைய அனைத்து பிரிவுகளினதும் பொலிஸ் அதிகாரிகளின் விடுமுறைகளை இரத்து செய்யுமாறு பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

அவசர விடுமுறைகள் பெற்றுக் கொள்ள தேவையிருப்பினும் மாகாண பொறுப்பதிகாரிகளிடம் அனுமதி பெற்று கொள்ள வேண்டும்.

அமைதிக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சட்டம் மற்றும் சமாதானத்தை பாதுகாப்பதற்கு முழுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் பொலிஸ் தலைமையகம் அறிவிப்பு விடுத்துள்ளது.

Latest Offers