மைத்திரியின் அதிரடி நடவடிக்கை! தனிமைப்படுத்தப்பட்டார் ரணில்

Report Print Vethu Vethu in பாதுகாப்பு
669Shares

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய 800 பேராக இருந்த பாதுகாப்பு அதிகாரிகள் தற்போது 10 அதிகாரி வரை குறைவடைந்துள்ளது.

அவரது பாதுகாப்பிற்காக விசேட அதிரடிப்படை அதிகாரிகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவுக்கு அமைய, முன்னாள் பிரதமரின் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது.

அதனை அத்தியாவசிய சேவையாக கருதி உடன் அமுலுக்கு வரும் வகையில் ரணிலின் பாதுகாப்பை நீக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபரின் கையொப்பத்துடன் கடிதம் ஒன்று வெளியாகியுள்ளது.

புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ள நிலையில், முன்னாள் பிரதமரின் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

எனினும் அரசியலமைப்புக்கு அமைய தானே தற்போதும் பிரதமர் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ள நிலையில், அலரி மாளிகையை விட்டு வெளியேற மறுத்து வருகிறார்.