யாழ். போதனா வைத்தியசாலையின் பாதுகாப்பு பிரிவின் தலைவர் விசாரணைக்கு அழைப்பு

Report Print Suthanthiran Suthanthiran in பாதுகாப்பு

யாழ். போதனா வைத்தியசாலையின் பாதுகாப்பு பிரிவின் தலைவராக கடமையாற்றும் ரிஷாந்தன் என்பவரை பயங்கரவாத பிரிவினர் விசாரணைக்காக அழைத்துள்ளனர்.

பயங்கரவாத பிரிவினரால் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு அமைவாக எதிர்வரும் 30ஆம் திகதி அதாவது நாளையதினம் பயங்கரவாத பிரிவின் புதிய செயலாளர் கட்டிடத் தொகுதிக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஆயினும், என்ன காரணத்திற்காக பயங்கரவாத பிரிவினரால் விசாரணைக்கு அவர் அழைக்கப்பட்டுள்ளார் என்ற காரணம் இதுவரையில் தெரிவிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகின்றது.