ரணில் தொடர்பில் மைத்திரியின் அதிரடி தீர்மானம்! பெரும் கவலையில் மஹிந்த தரப்பினர்

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

பதவி கவிழ்க்கப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மீதான ஜனாதிபதியின் தீர்மானம் தொடர்பில் கூட்டு எதிர்க்கட்சியினர் அதிருப்தி வெளியிட்டுள்ளனர் என சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

சட்டபூர்வமான பிரதமர் தான் என அறிவித்துள்ள ரணிலின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் எண்ணிக்கையை ஆயிரத்திலிருந்து 10 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவுக்கு அமைய ரணிலின் பாதுகாப்பு அதிரடியாக நீக்கப்பட்டது.

இந்நிலையில் ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைக்கப்பட்ட செயற்பாடு தவறானதென கூட்டு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

நேற்று பிரதமர் செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அலகபெரும இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சஜித் பிரேமதாஸவின் தலைமைத்துவத்தை எதிர்பார்த்து வருகின்றனர். இதனால் கட்சி ஆதரவாளர்களினால் ரணில் விக்ரமசிங்கவின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம்.

இலங்கையின் அரசியல் வரலாற்றில் நான்கு முறை பிரதமராகவும், நான்கு முறை எதிர்க்கட்சித் தலைவராகவும் செயற்பட்ட ரணில் விக்ரமசிங்கவுக்கு பூரண ஆதரவு வழங்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.