அலரி மாளிகையில் இருந்து அனைவரும் வெளியேற்றம்! அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

அலரி மாளிகையில் கடமையில் இருந்த அரச அதிகாரிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளதாக பிரதமர் செயலகத்தின் செயலாளர் எஸ்.அமரசேகர தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக எவ்வித அரச நிர்வாகமும் அலரி மாளிகையினுள் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அலரி மாளிகையின் நிலைமை தொடர்பில் எதிர்வரும் காலங்களில் மேற்கொள்ளப்படுகின்ற செயற்பாடு தொடர்பில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சட்டத்தை செயற்படுத்தாமல், சமாதானமாக தீர்த்து கொள்வதற்கு முயற்சிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அலரி மாளிகை பொது சொத்து என்பதனால் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்வதற்கு போதுமான அளவு சட்டமுறைகள் உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் அலரி மாளிகைக்குள் பதற்ற நிலைமை ஏற்பட்டது. பிரதமர் செயலக அதிகாரிகள் இருவர் மாளிகைக்குள் சென்றதனை தொடர்ந்து இந்த நிலைமை ஏற்பட்டது.

அலரி மாளிகையில் இருந்தவர்கள் தங்கள் எதிர்ப்பை வெளியிட்டதனை தொடர்ந்து குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டது.

பதவி நீக்கப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட குழுவினர் அலரி மாளிகையில் பலவந்தமான முறையில் தங்கியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers