தப்பியோடும் போது மனுஷ கைது செய்யப்பட்டாரா? உண்மைத் தகவல் அம்பலம்

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

அண்மையில் பதவி இராஜினாமா செய்த மனுஷ நாணயக்கார பெருந்தொகையான டொலருடன் சிங்கப்பூரில் கைது செய்யப்பட்டதாக நேற்றைய தினம் சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகி இருந்தது.

இது குறித்து தென்னிலங்கையில் அதிகம் பேசப்பட்டு வந்த நிலயில், அதுவொரு கட்டுக்கதை எனவும் தான் கைது செய்யப்படவில்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.

தனது குடும்பத்துடன் சிங்கப்பூர் சென்ற போது விமான நிலையத்தில் அவர் கைது செய்யப்பட்டதாக செய்தி வெளியாகியிருந்தது.

அத்துடன் அவரிடம் பாரிய தொகை அமெரிக்க டொலர் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டது.

எப்படியிருப்பினும் இது தொடர்பில் மனுஷ நாணயக்காரவிடம் வினவிய போது, அதில் எவ்வித உண்மையும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மைத்திரி - மஹிந்த அரசாங்கத்தில் அமைச்சு பதவியை பெற்றுக்கொண்ட மனுஷ நாணயக்கார, சில நாட்களில் அதனை ராஜினாமா செய்ததுடன் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து கொண்டார்.

அதனையடுத்து நாட்டை விட்டு வெளியேறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Offers