பதற்றத்தை ஏற்படுத்திய ஹெலிகொப்டர்

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

அண்மைக்காலமாக புத்தளம் பகுதியில் பறக்கும் ஹெலிகொப்டரினால் அந்தப் பகுதி மக்கள் பெரும் அச்சம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மாரவில, மஹவெவ, வென்னப்புவ மற்றும் நாத்தண்டிய பிரதேசத்தில் பறக்கும் ஹெலிகொப்டரினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

காலை 9.00 - 10.00 மணி வரையிலான காலப்பகுதியில் பயணிக்கும் இந்த ஹெலிகொப்டர் மிகவும் தாழ்வாக பயணிப்பதனால் பாடசாலை மாணவர்கள் சிலர் பதற்றமடைந்துள்ளனர்.

7ஆம் திகதி வென்னப்புவ ஜோஷப் வாஸ் வித்தியாலயத்திற்கு அருகிலும், 8ஆம் திகதி மஹவெவ மஹா வித்தியாலயத்திற்கு அருகிலும் ஹெலிகொப்டர் பயணித்துள்ளனர்.

தங்கள் பாடசாலையின் கூறைக்கு அருகில் பயணிக்கும் ஹெலிகொப்டரை பார்த்த மாணவர்கள் பதற்றமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பின்னர் குறித்த மாணவர்களின் பெற்றோர் சம்பவம் தொடர்பில் மாரவில பொலிஸாரிடம் அறிவிப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

அவ்வாறு பயணிக்கும் ஹெலிகொப்டர் கடற்படையினருக்கு சொந்தமான அல்லது தனியார் நிறுவனத்திற்கு சொந்தமானதா என்பது தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதாக விமானப்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Latest Offers