கருணாவை கொலை செய்யப் போவதாக மிரட்டும் பொன்சேகா!

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனை (கருணா) எச்சரிக்கும் வகையில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கருத்து வெளியிட்டுள்ளார்.

நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்தாத வகையில் கருணா அமைதியாக இருக்க வேண்டும். இல்லையேல் அடிக்கி வைக்க நேரிடும். நான் பீல்ட் மார்ஷல் என்பதை மறந்து விட வேண்டாம் என பொன்சேகா எச்சரித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியினால் தனக்கு உயிர் அச்சுறுத்தல் விடுவதாகவும், தான் யார் என்பது தெரியாமல் விளையாடுவதாக கருணா கருத்து வெளியிட்டிருந்தார்.

கருணா தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த தகவலை நேற்று வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் மட்டக்களப்பில் பணியில் ஈடுபட்டிருந்த இரு பொலிஸார் நேற்று மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர்.

இந்த மரணத்தின் பின்னணியில் கருணா இருப்பதாக இன்று நாடாளுமன்றதில் வைத்து, நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில் கருணாவை கடுமையாக எச்சரிக்கும் வகையில் பொன்சேகா கருத்து வெளியிட்டுள்ளார்.