இலங்கை கடற்படை மீது தமிழக பொலிஸார் வழக்கு பதிவு

Report Print Ashik in பாதுகாப்பு

இலங்கை கடற்படையினரின் அத்துமீறலை கண்டித்து இராமேஸ்வரம் மீனவர்கள் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளனர்.

இந்த போராட்டத்திற்கு அவர்கள் அழைப்பு விடுத்துள்ளதோடு, இலங்கை கடற்படை மீது தமிழக பொலிஸார் வழக்கும் பதிவு செய்துள்ளனர்.

கச்சதீவு அருகே அண்மையில் இலங்கை கடற்படை கப்பல் மோதியமை காரணமாக ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த வேலாயுதம் என்வருடைய படகு முழ்கியுள்ளது.

முழ்கிய படகுடன் மீட்டெடுக்கப்பட்ட 4 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இந்த நிலையில் மல்லாகம் நீதிமன்றத்தில் நேற்று மீட்கப்பட்ட குறித்த 4 மீனவர்களையும் ஆஜர்படுத்திய போது எதிர்வரும் டிசம்பர் மாதம் 14ஆம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் நடுக்கடலில் மூழ்கடிக்கப்பட்டு படகிலிருந்த நான்கு மீனவர்களையும் சட்டவிரோதமாக கைது செய்து கொண்டு சென்றமைக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளனது.

இதேவேளை படகுக்கு நிவாரண தொகை வழங்கிட கோரியும், சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை நிபந்தனையின்றி உடனடியாக விடுவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தை நடத்தவுள்ளதாக இராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவ சங்கம் அறிவித்துள்ளது.

இதனிடையே படகின் உரிமையாளர் வேலாயுதம், தனது படகை இந்திய எல்லையில் வைத்து இலங்கை கடற்படை ரோந்து கப்பலால் மோதி முழ்கடித்து படகில் இருந்த நான்கு மீனவர்ளையும், கைது செய்துள்ளதால் இலங்கை கடற்படை மீது உடனடி நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்ததின் பெயரில் மண்டபம் பொலிஸ் நிலைத்தில் இலங்கை கடற்படை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.