பொலிஸாரின் புதிய யுக்தி! வடக்கின் முக்கிய மாவட்டத்தில் இன்று முதல்

Report Print Theesan in பாதுகாப்பு

போக்குவரத்து விதிகளை மீறி வேகமாக பயணிக்கும் வாகனங்களின் வேகத்தை குறைப்பதற்கான புதிய யுக்தியொன்றை பொலிஸார் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

பொலிஸ் அதிகாரிகளின் உருவங்களையொத்த பொம்மைகளை வடிவமைத்து ஏ9 பிரதான வீதியின் ஓரங்களில் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் இன்று வடக்கின் முக்கிய மாவட்டமான வவுனியாவில் குறித்த புதிய யுக்தியை போக்குவரத்து பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

இவ்வாறு பொருத்தப்பட்ட பதாதைகள், வாகன சாரதிகளுக்கு பொலிஸ் அதிகாரியொருவர் நிற்பது போன்று காட்சியளிக்கும்.

இதனால் சாரதிகள் வாகனங்களின் வேகத்தை குறைப்பதோடு, இதனால் ஏற்படக்கூடிய விபத்துக்களையும் குறைத்துக் கொள்ள முடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

Latest Offers