பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியை கடுமையாக எச்சரித்த நீதிபதி

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவை கடுமையாக எச்சரித்த பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பில் 11 பேர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி, அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன நேற்று பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

கடத்தல் வழக்கிலோ அல்லது விசாரணைகளிலோ தலையீடு செய்யவோ சாட்சிகளுக்கு அச்சுறுத்தலை விடுக்கவோ கூடாது என்று ரவீந்திர விஜேகுணரத்னவை நீதிபதி கடுமையாக எச்சரித்தார்.

சாட்சிகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக ஏதேனும் முறைப்பாடுகள் கிடைத்தால், வழக்கின் தீர்ப்பு அளிக்கப்படும் வரையில், பிணை வழங்கப்படாமல் விளக்கமறியலில் வைக்க நேரிடும் என்றும், அட்மிரல் விஜேகுணரத்னவுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

11 பேர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கின் முக்கிய சாட்சியான கடற்படை அதிகாரி லெப்.கொமாண்டர் லக்சிறி கலகமுவவை தாக்கி, அச்சுறுத்தியதாகவும் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது.

எனினும், சாட்சியை அச்சுறுத்திய வழக்கில், அட்மிரல் விஜேகுணரத்னவின் பெயரை சந்தேகநபராக குறிப்பிட கோட்டே பொலிஸார் மறுத்திருந்தனர்.

இதன் காரணமாக கடும் எச்சரிக்கையின் பின்னர் ரவீந்திர விஜேகுணரத்னவை பிணையில் விடுதலை செய்வதாக நீதிபதி அறிவித்தார்.