உச்ச நீதிமன்றத்தில் தொடரும் விசேட வாதம்! வளாகம் முழுவதும் தீவிர பாதுகாப்பு..

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

உச்ச நீதிமன்றத்தை சுற்றியுள்ள பகுதிகளில் இன்றும் விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

100 பொலிஸ் அதிகாரிகளை கொண்ட குழுவொன்று பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுலகம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்பிற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்றைய தினமும் விசாரிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் ஏற்படும் அசாதாரண சூழ்நிலைகளை சமாளிக்கும் வகையில் விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த விசாரணைகளின் தீர்ப்பு நாளையதினம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Latest Offers