முல்லைத்தீவில் பெண் ஒருவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

Report Print Mohan Mohan in பாதுகாப்பு

முல்லைத்தீவில் மண்ணில் புதைந்திருந்த நிலையில் அபாயகரமான வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கொக்குத்தொடுவாய் வடக்கில் வசிக்கும் இந்திரதாசன் யாழினி என்பவர் வீட்டில் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

வீட்டு முற்றத்தை பெருக்கி குப்பையை குழிதோண்டி புதைக்க நேற்று முயற்சித்த போது அபாயகரமான வெடிபொருட்கள் மண்ணில் புதைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது

சம்பவம் தொடர்பில் கொக்குத்தொடுவாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்ட பொலிஸார், குறித்த வெடிபொருட்களை பாதுகாப்பாக அங்கிருந்து அகற்றுவதற்கு நீதிமன்றத்திடம் அனுமதி கோரியுள்ளனர்.

நீதிமன்றத்தின் அனுமதி கிடைக்கும்வரை குறித்த பகுதியில் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை நேற்று நண்பகல் கொக்குத்தொடுவாய் மத்தி பகுதி தனியார் காணி ஒன்றில் கனரக வாகனத்தை தகர்த்து அழிக்கும் அபாயகரமான வெடிபொருள் ஒன்று மண்ணில் புதைந்திருந்த நிலையில விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...