பூவரசன்குளம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கைது

Report Print Kamel Kamel in பாதுகாப்பு

வவுனியா - பூவரசன்குளம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிங்கள ஊடகமொன்று இன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2010ஆம் ஆண்டு கிரிபத்கொட பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற கொள்ளை சம்பவமொன்றுடன் தொடர்புடைய சந்தேகநபர் மற்றும் அவரது மகன் ஆகியோரை மிக மோசமாக தாக்கியதாக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டின் கீழ் பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவின் அதிகாரிகளினால் குறித்த பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியை கைது செய்ய ஆயத்தமான போது அவர் நோய்வாய்ப்பட்டு களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், வைத்தியசாலையில் வைத்து பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியை கைது செய்துள்ளதாகவும் அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி குறித்த சம்பவம் இடம்பெற்ற காலத்தில் கிரிபத்கொட பிரதேசத்தில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக கடமையற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.