நாடு முழுவதும் இன்று களமிறக்கப்படும் பொலிஸார்! கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்

Report Print Sujitha Sri in பாதுகாப்பு

நாடு முழுவதிலுமுள்ள க.பொ.த சாதாரணதர பரீட்சை நிலையங்களுக்கு அருகில் இன்றைய தினம் பொலிஸார் களமிறக்கப்படவுள்ளனர்.

இலங்கையில் தற்பொழுது கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சைகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் குறித்த பரீட்சைகள் அனைத்தும் இன்றுடன் நிறைவடைகின்றன.

இவ்வாறான சந்தர்ப்பத்திலேயே நாடு முழுவதிலுமுள்ள க.பொ.த சாதாரணதர பரீட்சை நிலையங்களுக்கு அருகில் விசேட பொலிஸ் நடமாடும் சேவை மேற்கொள்ளப்படவுள்ளது.

இதற்கான நடவடிக்கையை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எடுத்துள்ளதுடன், பரீட்சை மத்திய நிலையங்களுக்கு அருகில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்படுவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே பரீட்சைகளில் தோற்றும் மாணவர்கள் பரீட்சை நிறைவடைந்தவுடன் பிரச்சினைகளில் ஈடுபடாது வீடுகளுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.