மட்டக்களப்பில் கொலை செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரி! மனைவிக்கு மைத்திரி வழங்கிய வாய்ப்பு

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

மட்டக்களப்பில் கொலை செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரி இந்திக்க பிரசன்னவின் குடும்பத்தினர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார்.

மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் வீதியில் கடமையில் ஈடுபட்ட போது கொலை செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரியின் குடும்பத்தினர் நேற்று மாலை ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலின் போது ஜனாதிபதி தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த பொலிஸ் அதிகாரியின் நான்கரை வயது மகனின் கல்வி நடவடிக்கை, குடும்பத்தினருக்கு அவசியமான தேவைகளுக்கு உதவிகளையும் வழங்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.

உயிரிழந்த பொலிஸ் அதிகாரியின் மனைவிக்கு காலி, நாகொட பிரதேச செயலகத்தின் வேலைத்திட்டம் ஒன்றில் அபிவிருத்தி அதிகாரி பதவியையும் ஜனாதிபதி வழங்கியுள்ளார்.